ஆயில் ஃப்ரி சம்மர் கர்ரி
 • 290 Views

ஆயில் ஃப்ரி சம்மர் கர்ரி

தேவையான பொருட்கள்:

 • துவரம் பருப்பு - 50 கிராம்
 • வெள்ளரிக்காய் - 400 கிராம்
 • பூசணி - 1 கீற்று
 • மணத்தக்காளிக்கீரை நறுக்கியது - 1 கப்
 • பெரிய வெங்காயத் துண்டுகள் - 1 கப்
 • தக்காளி விழுது - 12 கப்
 • கொத்தமல்லித் தழை விழுது - 1 டேபிள் ஸ்பூன்
 • கறிவேப்பிலை விழுது - 1 டேபிள்ஸ்பூன்
 • பச்சை மிளகாய் கீறியது - 10
 • எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
 • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

துவரம் பருப்பை வேக வைக்கவும். வெந்தவுடன் மணத்தக்காளிக் கீரையை சேர்த்து வேக விடவும். வெந்ததும் போதுமான நீருடன் தயாரித்து வைத்துள்ள விழுதுகளைக் கலந்து கொதிக்க வைக்கவும். பின்னர் வெள்ளரிக்காய், பூசணி, வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக வைக்கவும். பதம் பார்த்து அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் எலுமிச்சைச் சாற்றை கலந்துவிடவும்.

இந்த உணவு கோடையை சமாளிக்க நீர்ச்சத்து, ஏனைய சத்துகளுடன் விட்டமின் சி - யும் நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது. எண்ணெய் இல்லாததால் எளிதில் ஜீ“ரணமாகும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடப் பொருத்தமானது.