ஆரஞ்ச் ஜிங்கிள்ஸ்
  • 94 Views

ஆரஞ்ச் ஜிங்கிள்ஸ்

தேவையான பொருட்கள்:

  • ஆரஞ்சுப்பழம் - 6 (கமலா, சாத்துக்குடியாகக் கூட இருக்கலாம்)
  • சுக்கு - சிறிது
  • குளுக்கோஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

ஆரஞ்சுப்பழத்தைத் தோல் நீக்கி, சுளையை தனியாக எடுத்துக் கொண்டு, சுக்கு+உப்பைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும். (அதிக நேரம் மிக்ஸியில் அரைத்தால் துவர்ப்புச் சுவை கூடி விடும்) ஆரஞ்சுப்பழத்திலேயே தண்ணீர் இருப்பதால், தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. குளுக்கோஸ் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பரான "எனர்ஜி ஃபுட்" இதுதான் என்பீர்கள். எந்த நேரத்திலும் பருகலாம்.