பனீர் போண்டா
 • 363 Views

பனீர் போண்டா

தேவையான பொருட்கள்:

பூரணத்துக்கு:

 • துருவிய பனீர் - 1 கப்
 • பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை - 1 கப்
 • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
 • பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
 • பொடியாக நறுக்கிய இஞ்சி
 • தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
 • மிளகாய்த்தூள் - 1 12 டீஸ்பூன்
 • பொடித்த மசாலா (பட்டை, லவங்கம், ஏலக்காய்) - 1 டீஸ்பூன்
 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 14 கப்
 • எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
 • மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
 • உப்பு - 1 சிட்டிகை
 • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


மேல் மாவுக்கு:

 • கடலை மாவு - 1 கப்
 • அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
 • மைதா மாவு - 14 கப்
 • ஓமம் - 14 டீஸ்பூன்
 • மிளகாய்த்தூள் - 12 டீஸ்பூன்
 • சமையல் சோடா - 14 டீஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய பூண்டைப் போட்டு வெங்காயம், இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். காய்கள் சுருள வதங்கியதும், உப்பு, மிளகாய்த்தூள், பனீர் சேர்த்து நன்கு வதக்கி தனியாத்தூள், பொடித்த மசாலாத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கினால் பூரணம் ரெடி! மேல் மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி, மாவில் தோய்த்தெடுத்து காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.