உளுந்து, வெந்தயம், பச்சரிசி, புழுங்கலரிசி ஆகியவை களை நான்கு மணிநேரம் ஊறவையுங்கள். உளுந்தையும், அரிசியையும் தனித்தனியாக அரைத்து, தேவைக்கு உப்பும் சேர்த்து ஒன்றாக கலக்கி ஐந்து மணிநேரம் வைத்திருங்கள்.
பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவைகளை சிறிதாக நறுக்குங்கள். பனீர் முதல் உப்புவரையுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக்குங்கள்.
தோசைக்கல்லில் மாவை கெட்டியாக ஊற்றுங்கள். அதற்கு மேல் கூட்டை சிதறுங்கள். நெய்விட்டு சுட்டு, குழந்தைகளுக்கு டிபனாகவும் கொடுத்து அனுப்பலாம். பாக்ஸில் மீதமேயிருக்காது.