பெப்பர் மஷ்ரூம்
 • 284 Views

பெப்பர் மஷ்ரூம்

இயற்கை நமக்குத் தந்த வரப்பிரசாதம்தான் இந்த காளான். அதை இப்போ செயற்கையா உருவாக்கினாலும் இதோட சுவைய அடிச்சிக்கிறதுக்கு... ம்ஹூம் சான்ஸே இல்ல. சத்தான சுவையான உணவு காளான். எப்படிச் செய்தாலும் அதன் டேஸ்ட்.. ஆஹாதான். இந்த முறை பெப்பரோடு சேர்த்து சாப்பிட்டுப் பாருங்க. சுவையும் மணமும் அபாரம். உடல் நலனுக்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்:

 • பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
 • சோள மாவு - 2 டீ ஸ்பூன்
 • மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
 • வெங்காயம் - 1
 • பால் - 14 கப்
 • பூண்டு - 5 பல்
 • சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
 • எண்ணெய் - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* பட்டன் மஷ்ரூம், வெங்காயம், பூண்டு இவற்றை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் நான்கு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

* இதில் மஷ்ரூம், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்­ரை தெளித்து வேக விடவும்.

* சோள மாவில் பால் சேர்த்துக் கரைத்து, வெந்த மஷ்ரூமில் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.

* கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* இது பிரெட் டோஸ்டுக்கு ஏற்றது.

* வதக்கும்போது கால் கப் பனீர் துண்டுகளை சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.