பீட்ஸா
 • 266 Views

பீட்ஸா

தேவையானவை:

 • மைதா - 250 கிராம்
 • ஜீனி - 2 டீஸ்பூன்
 • ஈஸ்ட் - 1/4 டீஸ்பூன் (உடன் வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்)
 • வெண்ணெய் - 1 டீஸ்பூன்
 • பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
 • உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

மைதா மாவில் கலந்துவைத்த ஈஸ்ட், பேக்கிங் பவுடர், வெண்ணெய், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிறகு சற்று விரிவான பாத்திரம் 8 அங்குல விட்டம் 2 அங்குல உயரம் ஒன்றில் நெய் தடவி, பாத்திரம் கொள்ளும் அளவு மாவு அரை செ.மீ கணம் இருக்கும்படி விரித்து வைக்கவும். வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும்.
 

பீட்ஸாவினுள் பரப்புவதற்கு தேவையானவை:

 • தக்காளி - 300 கிராம்
 • குடை மிளகாய் - 1
 • மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
 • பூண்டு - 4 பல்
 • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 • வெள்ளரிக்காய் - 1
 • பெரிய வெங்காயம் - 1
 • சிஸ் - 50 கிராம்
 • இஞ்சி - சிறிய துண்டு
 • உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:


வெங்காயம், பூண்டு, இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, தக்காளித்துண்டுகளை போட்டு வதக்கவும். உப்பு, மிளகாய்தூள் போடவும். சாஸ்மாதிரி கெட்டியானவுடன் இறக்கவும். 2 தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி குடை மிளகாயையும் நறுக்கி, சுட்டு வைத்து இருக்கும் முக்கால் பங்கு வெந்த பீட்ஸாவின் உள்ளே வைத்து அடுக்கி, மிளகாய் சாஸ் ஊற்றி சிஸ்ஸை துருவி மேலே தூவிக்கொள்ளவும். வெண்ணெய் 2 டீஸ்பூன் மேலே விட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி சூட்டில் வேகவைத்து எடுக்கவும். இப்பொழுது சுவையான பீட்ஸா ரெடி.