வாழைக்காயை கழுவித் துடைத்து, அடுப்பில் காட்டி நன்கு சுட்டெடுங்கள். ஆறவிட்டு, தோலை நீக்குங்கள். பின்னர், துருவியால் துருவிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வாழைக் காயில் சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அனைத்தையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். வித்தியாசமான ருசியில் வாழைக்காய் தொக்கு தயார்.