உருளைக்கிழங்கு பர்பி
  • 567 Views

உருளைக்கிழங்கு பர்பி

தேவையான பொருட்கள்:-

  • உருழைகிழங்கு துருவல் - 1 கப்
  • சர்க்கரை - கப்
  • ஏலக்காய் - 6
  • நெய் - 4 டீஸ்பூன்
  • குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை:-

உருளைக்கிழங்கை தோல் துருவிக்கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் துருவலையும், நெய்யையும் போட்டு அடுப்பிலேற்றி, சற்று கிளறிய பின்னர் சிறிதளவு தண்ணீரையும், சர்க்கரையும் சேர்த்து அடுப்பை நிழல் போல எரிய விட்டு கிளறி, கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும். பின்பு ஏலக்காய் பொடியையும், குங்குமப்பூவையும் சேர்த்து கிளறி, நெய் தடவிய தாம்பளத்தில் கொட்டி பரப்பி கத்தியால் துண்டு போடவும். ஆறியபின் எடுத்து தனித் தனியே வைக்கவும்.