பம்கின் ரோல்
  • 110 Views

பம்கின் ரோல்

வீட்லயே ஸ்வீட் செய்து ஹெல்தியா சாப்பிடணும், ஈஸியாக இருக்கணும், டைம் மிச்சமாகணும், அதேநேரத்துல ஸ்வீட் ரொம்ப டேஸ்டாவும், ரிச்சாவும் இருக்கணும்னா பம்கின் ரோல்ஸ் செய்து சாப்ட்டு பாருங்க...சூசூசூசூப்பர்னு சொல்லுவீங்க..

தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு - 3/4 கப்
  • பேக்கிங் பவுடர் - 1/2 டீ ஸ்பூன்
  • பேக்கிங் சோடா - 1/2 டீ ஸ்பூன்
  • பட்டை தூள் - 1/2 டீ ஸ்பூன்
  • கிராம்பு தூள் - 1/2 டீ ஸ்பூன்
  • உப்பு - 1/4 டீ ஸ்பூன்
  • முட்டை - 3
  • சீனி - 1 கப்
  • பம்கின் கூழ் (pumpkin puree) - 2/3 கப்


ஃபில்லிங் (Filling)

  • க்ரீம் சீஸ் - 1 கப் (8 oz)
  • ஐஸிங் சுகர் - 1 கப்
  • பட்டர் - 6 டேபிள் ஸ்பூன்
  • வெனிலா - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* அவனை 375 Fக்கு முற்சூடு செய்யவும்.

* 15 x 10 ட்ரேயில் வாக்ஸ் பேப்பர் போட்டு, மேலே பட்டர் பூசி, மாத்தூவி வைக்கவும்.

* சுத்தமான கிச்சன் டவலில் ஐஸிங் சுகர் தூவி வைத்துக்கொள்ளவும்.

* மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, பட்டை(சின்னமன்) தூள், கிராம்பு தூள் எல்லாவற்றினையும் ஒன்றாக கலக்கவும்.

* முட்டை, சீனி இரண்டையும் எலக்ட்ரிக் மிக்ஸரால் நன்கு அடிக்கவும்.

* பின்னர் பம்கின் கூழ் சேர்த்து, நன்கு அடிக்கவும்.

* இறுதியில் மாவுக் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

* இந்தக் கலவையினை ட்ரேயில் ஊற்றி, 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

* கேக் வெந்ததும், கிச்சன் டவலை மேலே விரித்து, ட்ரேயினை கவிழ்த்து வைக்கவும்.

* மேலே லேயராக இருக்கும் பேப்பரினை மெதுவாக உரித்து எடுக்கவும்.

* கிச்சன் டவலோடு சேர்த்து (ட்ரேயினை எடுத்திட்டு தான் சுற்றணும்), பம்கின் ரோலினை சுற்றி அப்படியே 30 நிமிடங்கள் விடவும்.

* சூடு ஆறியதும் கிச்சன் டவலை எடுத்து விட்டு, ஒரு தட்டையான பலகையில் பம்கின் ரோலினை விரித்து வைத்து, ஃபில்லிங்கில் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக மிக்ஸ் பண்ணி, கேக் மீது பூசவும்.

* ஐஸிங் பூசி முடிந்ததும் மீண்டும் மெதுவாக சுற்றி, குளிர்சாதனப் பெட்டியில் 1 மணி நேரம் வரை வைத்து, பிறகு பரிமாறவும்.