ரசப் பொடி
  • 400 Views

ரசப் பொடி

சுடச்சுட மணக்கும் ரசத்தை உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கையிலோ, சாதத்துடன் கலந்து சாப்பிடுகையிலோ கிடைக்கும் சுகானுபவம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். நம் தென்னிந்தியாவின் பிரசித்திக்குப் பேர் பெற்ற பல காரணங்களில் ரசமும் ஒன்று அல்லவா! ஜுரம் வருவதுபோல இருந்தாலும் சரி, ஜுரம் வந்து மீண்டு எழுகையிலும் சரி, ஜலதோஷம் பிடித்தாலும், தொண்டை கமறினாலும் சுடச்சுட ரசத்தை சேர்த்து பரிமாறி, ரசம் எல்லாவற்றையும் சரியாக்கும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்து விட்டிருப்பதை தென்னிந்தியர் பலரும் மறுக்க மாட்டார்கள் தானே..

தேவையான பொருட்கள்:

  • மஞ்சள் - 50 கிராம்
  • தனியா - 400 கிராம்
  • மிளகாய் வற்றல் - 250 கிராம்
  • மிளகு - 50 கிராம்
  • சீரகம் - 100 கிராம்
  • துவரம் பருப்பு - 250 கிராம

 

செய்முறை:

* இவற்றை வெயிலில் நன்கு காய வைத்து நைசாக அரைத்துப் பொடியாக்கினால் ரசப் பொடி தயார்.

* காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்.