ரிப்பன் பக்கோடா
  • 112 Views

ரிப்பன் பக்கோடா

தேவையான பொருள்கள்:

  • கடலை மாவு - 3 கப்
  • அரிசி மாவு - 1 கப்
  • மிளகாய் தூள் - 5 டீ ஸ்பூன் (அ) தேவையான அளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
  • சோடா மாவு - சிட்டிகை அளவு
  • எண்ணை பொரித்தெடுக்க
  • முறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு

செய்முறை:

* கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

* தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

* காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.

* (கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமயம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

* கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.