லெமன் சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம்ன்னு நிறைய சாத வகைகள் செய்து பார்த்திருப்பீங்க.... மல்டி பொடி சாதம்ன்னு ஒரு சாதம் இருக்கு தெரியுமா? தெரியாதவங்க உடனே செய்து பாருங்க! இந்த சாதம் சுவையாக இருப்பதோடு உடலுக்கு வலுவையும் தரக்கூடியது.
* அரிசியைக் களைந்து ஒரு பங்கு அரிசிக்கு, 21/2 மடங்கு தண்ர் என்ற அளவில் விட்டு குக்கரில் 3 விசில் வரவிட்டு இறக்கவும்.
* துவரம்பருப்பு, கொள்ளு, கடலைப்பருப்பு, எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய்வற்றல் எல்லாம் தனித்தனியாக வெறும் வாணலியில் எண்ணை விடாமல் வறுக்கவும்.
* கறிவேப்பிலையைத் தனியாக வறுக்கவும்.
* எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
* தேவையான உப்பு சேர்த்து, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
* சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
* குறிப்பு: இந்தப் பொடியைத் தயாரித்து வைத்துக்கொண்டால் இரவு நேரம் + அவசரத்திற்கு ஒன்றும் இல்லாத நேரத்தில் மிகவும் உதவும். ஒருமாதம் வரை வைத்து உபயோகிக்கலாம்.