கற்கண்டு பொங்கல்
  • 575 Views

கற்கண்டு பொங்கல்

எப்பவுமே விஷேசங்கள்ல கற்கண்டுக்கு தனி இடம் உண்டு. இந்த பொங்கல் திருநாள்ல கற்கண்டு பொங்கல் செய்து மங்களகரமா இனிக்க இனிக்க பொங்கல் கொண்டாடுங்க.

தேவையான பொருட்கள்:

  • கற்கண்டு (டைமண்டு) - 1/4 கிலோ
  • பச்சரிசி - 1 கப்
  • பாசி பருப்பு - 1/2 கப்
  • தட்டிய ஏலக்காய் - 1 டீ ஸ்பூன்
  • காய்ந்த திராட்சை - சிறிதளவு
  • முந்திரி - 100 கிராம்
  • எண்ணெய் - 50 கிராம்
  • நெய் - 100 கிராம்
  • பால் - 1/2 டம்ளர்

செய்முறை:

* முதலில் அரிசி பருப்பை கழுவி 4 டம்ளர் தண்­ணீருடன் பால் சேர்த்து குக்கரில் வேக விட வேண்டும்.

* பிறகு வெந்தவுடன் ஏலக்காய் பொடி கற்கண்டை சேர்த்து கிளறவும்.

* பிறகு வாணலியில் நெய் ஊற்றி எண்ணெயும் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்துக் கொட்டி கிளறி இறக்கவும்.

* பத்தே நிமிடத்தில் கற்கண்டு பொங்கல் ரெடி.

* பண்டிகை நாட்களில் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து சாப்பிட இது மிகவும் உகந்த உணவாகும்.