செம்பருத்தியை இதழ்களாக ஆய்ந்து கழுவுங்கள். சர்க்கரையுடன் தண்ணீரைக் கொதிக்கவிடுங்கள். சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து, செம்பருத்தி இதழ்களை சேர்த்து மூடிவிடுங்கள். அரைமணி நேரம் கழித்து வடிகட்டி, ஆறியதும் ஐஸ்கட்டிகளைச் சேர்த்து ஜில்லெனப் பரிமாறுங்கள்.