மைதாவுடன், வெண்ணெய், பால் ஏடு, நெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளுங்கள். இத்துடன் முக்கால் கப் பாலை சேர்த்து மிருதுவாகப் பிசைந்து, ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் வையுங்கள்.
ஒரு கடாய் அல்லது குக்கரில் கால் பாகம் அளவு மணலை நிரப்பி சூடேற்றுங்கள். கால் கப் பாலை வெதுவெதுப்பாக்கி, அதில் குங்குமப்பூவை கரையுங்கள். மாவிலிருந்து சிறிதளவு எடுத்து சற்று கனமான பூரியாகத் தேய்த்து, ஒரு முள் கரண்டியால் ஆங்காங்கே குத்திவிடுங்கள் (அழுத்தாமல்). ஒரு டிரேயில் 4 அல்லது 5 பூரிகளை வைத்து அதன் மேல் குங்குமப்பூ கலந்த பாலை மேலாகத் தெளியுங்கள். இதனை சூடாக்கப்பட்ட மணல் மேல் வைத்து, மூடி, சிறு தீயில் 15 நிமிடம் வைத்து, பிறகு திறந்து, மீண்டும் அதன் மேல் சிறிது பால் தெளியுங்கள். திரும்பவும் 15 - 20 நிமிடம் வைத்து எடுத்து மறுபடியும் இருபுறமும் பால் தெளியுங்கள் (மைக்ரோவேவ் அவனிலும் சமைக்கலாம்).
ஒரு அலுமினிய பேப்பரில் சுற்றி அலங்கரித்துப் பரிமாறுங்கள்.