பாசிப்பருப்பை மலர வேகவையுங்கள். புடலங்காயை அரை வட்டமாக மெல்லிதாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். இவற்றை மஞ்சள்தூள், பாசிப்பருப்பு, உப்புடன் சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்குங்கள். பின் பாலை சேர்த்து, நெய்யில் சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, கூட்டில் சேருங்கள்.