சொதி
 • 457 Views

சொதி

தேவையானவை:

 • முருங்கைக்காய் - 2
 • முட்டைக்கோஸ் - 100
 • உருளைக்கிழங்கு - கால் கிலோ
 • பாசிப் பருப்பு - கால் மாகாணிப்படி (வறுத்தது)
 • பச்சை மிளகாய் - 5 அல்லது 6 (காரத்திற்கேற்ப)
 • இஞ்சி - 2 அங்குலத் துண்டு
 • சின்ன வெங்காயம் - உரித்தது (அரைக்கால் படி)
 • வெள்ளைப்பூண்டு - 4 அல்லது 5 பல்
 • தேங்காய் - 2 நடுத்தரம் ( பால் எடுக்க)
 • எலுமிச்சம்பழம் - 1

செய்முறை:

தேங்காயைத் துருவி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து முதல் பாலை கெட்டியாக எடுக்கவும். இரண்டாவது, மூன்றாவது முறை எடுக்கும் பாலினை ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் உட்பட காய்கறிகள் அனைத்தையும் உப்பிட்டு வேகவைத்துக் கொள்ளவும்.

பாசிப் பருப்பை வறுத்து அதனுடன் 3 பச்சை மிளகாய், வெள்ளைப்பூண்டு சேர்த்து வேக விடவும்.

இவற்றுடன் 2வது 3வது முறை எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கிளறிவிடவும் கொதிக்கும் நேரம் இஞ்சியைத் தட்டி எடுத்த சாறு சேர்த்துக் கிளற வேண்டும். கிளறுவதை விட்டு விட்டால் அடிப்பிடிக்க ஆரம்பித்துவிடும் கொதிக்கும் போது முதல் தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி கடுகு, கறிவேப்பிலை தாளிதம் செய்ய வேண்டும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து எலுமிச்சைச் சாறு பிழியவும். புளிக்காத கறுப்புத் திராட்சையைச் சுத்தம் செய்து ஒவ்வொன்றாய் உரித்துப் போடலாம்.

இதைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவது ஜோர். அது மட்டுமல்ல, இட்லி, பூரி, சப்பாத்தி போன்றவற்றுக்கான சைட்டிஷ்ஷாகவும் வைத்து உண்ணலாம்.