டேஸ்டி ராகி பால்ஸ்
  • 142 Views

டேஸ்டி ராகி பால்ஸ்

தேவையான பொருட்கள்:

  • கேழ்வரகு மாவு - 1 கப்
  • வெல்லப்பொடி - 1/2 கப்
  • பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்
  • வறுத்த எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • சமையல் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

கேழ்வரகு மாவுடன் ஒரு சிட்டிகை உப்பை நன்கு கலந்து, திட்டமாக தண்ணீர் தெளித்து அடை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பின்பு தோசைக்கல்லை சூடாக்கி அதில் மாவை மெல்லிய அடைகளாகத் தட்டி வெந்த பின் எடுத்து வைக்கவும். அடைகள் ஆறிய பிறகு சிறு துண்டங்களாக பிய்த்து மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும். வேர்க்கடலை மற்றும் வெல்லத்தை தனித்தனியே மிக்சியில் அரைத்து வைக்கவும். கடைசியாக கேழ்வரகு அடை, வெல்லம், வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சேர சுற்றவும். இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி, வறுத்த எள்ளின் மீது புரட்டி எடுக்கவும். இந்த டேஸ்டி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும். இரும்புச் சத்து நிறைய உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது.