பச்சரிசி, புழுங்கல் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நன்றாக ஊற வைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை உடைத்துப் பல்லுப் பல்லாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். அரிசி - பருப்பு அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து தேங்காய், வெங்காயம், மிளகாய்த்தூள், பெருங்காயம், ஆகியவற்றை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி மாவில் போட்டு, நன்றாகக் கிளறிக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெயை ஊற்றி, அடுப்பில் காய வைக்கவும். மாவை எடுத்துத் வடையாகத் தட்டி, எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்துத் தட்டில் போட்டுக் கொள்ளவும். ஒரு ஸ்வீட், ஒரு தவலை வடை, ஒரு காபி - இந்தக் காம்பினேஷன் அருமையான மாலை டிபனாகும்.