முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அத்துடன் சீரகம், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறியதாக தட்டி அரிசி மாவில் புரட்டி எடுக்கவும். இந்த உருண்டைகளை, காய்ந்த தோசைக் கல்லில் போட்டு நெய் கலந்த எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போடவும். இருபுறமும் பொன்னிறமாக வெந்து முறுமுறுவென ஆனதும் எடுத்து சுடச்சுட சாஸூடன் பரிமாறவும். பட்டாணியை வேக வைத்து உருண்டைக்குள் வைத்து மூடி பிறகு தட்டியும் செய்யலாம். குழந்தைகளுக்கு பிடித்த டிபன் இது!