கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பச்சை மிளகாய், கசகசா இவையனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, அரைத்துக் கொள்ளவும். பின்னர், முந்திரியை ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு, அதில் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதங்கியவுடன் வெட்டிய காய்கறிகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வறுத்துப் பொடியாக்கிய தனியா மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்தவுடன் உப்பு சேர்த்து இறக்கினால் தக்காளி சால்னா தயார்.