பால் சுண்டைக்காய் பாயசம்
  • 242 Views

பால் சுண்டைக்காய் பாயசம்

பாயாசம் எல்லோருக்கும் பிடித்தமான பானம். சுவையான பாயாசத்தையே ஆரோக்கியமானதாக மாற்ற, வேக வைத்து அரைத்த சுண்டைக்காயை சேர்த்து செய்து பாருங்கள்... சுண்டக்காயா..?! என கேட்பது புரியுது... செய்து பாருங்க உங்க குழந்தைகளுக்கு நீங்களே சொன்னாத்தான் இது சுண்டைக்காய் பாயாசம் என்பதே தெரியும். அந்தளவுக்கு கசப்பே இல்லாத சுவையான பானம்!

தேவையான பொருட்கள்:

  • சுத்தம் செய்த பால் சுண்டைக்காய் - 1/4 கப்
  • பாசிப்பருப்பு - 1/2 கப்
  • திக்கான வெல்லக் கரைசல் - 1 கப்
  • திக்கான முதல் தேங்காய்ப் பால் - 1 கப்
  • முந்திரி - 10
  • திராட்சை - 20
  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, கழுவி, குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

* பால் சுண்டைக்காயை சுத்தம் செய்து, இடித்து கொஞ்சமாக தண்­ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து, மிக்சியில் இட்டு அரைத்து, வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசலை எடுத்துக் காய்ச்சி இறுகும் நிலையில் சுண்டைக்காய் சாறு, பருப்பு மசியல், சேர்த்துக் கிளறி, இறக்கும் தறுவாயில் தேங்காய்ப் பால் சேர்த்து, நெய்யில் சிவக்க வறுத்து வைத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கலக்கி சுவைக்கவும்.

* கசப்பு என்பதே இல்லாத ஆச்சரியமான ஆரோக்கிய பாயசம் இது.