வெண்ணிலா ஐஸ்கிரீம்
  • 387 Views

வெண்ணிலா ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

  • கிரீம் - 1 கப்
  • பால் - 1 கப்
  • சர்க்கரை - 1/2 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
  • ஐஸ் கட்டிகள் - 4 கப்
  • கல்லுப்பு - 1 கப்
  • ஜிப்லாக் பை or கெட்டியான பிளாஸ்டிக் பை - 1
  • டக்ட் டேப் or செல்லோ டேப் - 1
  • ஹார்லிக்ஸ் பாட்டில் or டப்பா - 1

செய்முறை:

பால், கிரீம், வெண்ணிலா எஸ்ஸென்ஸ், சர்க்கரை எல்லாவற்றையும் பிளாஸ்டிக் பையில் ஊற்றவும். பிறகு ஒரு நல்ல இறுக்கமாக பிடிக்கும் டேப் கொண்டு மூடி ஒட்டவும். இது இறுக்கமாக பிடிக்க வேண்டும். ஏனென்றால் இதை நன்றாக உலுக்கும்போது பால் வெளியே வந்து விடும். இப்போது டப்பாவில் இந்த பிளாஸ்டிக் பையை போட்டு அதன் மேல் ஐஸ்கட்டிகள், உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாக மூடவும். இதையும் தண்ணீர் வெளிவராமல் இருக்க டேப் போட்டு ஒட்டலாம். இப்போது நன்றாக பத்து நிமிடம் குலுக்கவும். அதிகநேரமும் குலுக்கலாம். பிறகு இந்த டப்பாவைத் திறந்து, பையை எடுத்து அதை ரெஃப்ரிஜ்ரேட்டரில் இருக்கும் ஃபிரீஜரில் வைக்கவும். அரை மணிநேரம் கழித்து இந்தப் பையை திறந்து பாருங்கள். சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீம் ரெடி.