வெஜிடபிள் உருண்டை
 • 266 Views

வெஜிடபிள் உருண்டை

தேவையான பொருட்கள்:-

 • இட்லிக்கு போடும் புழுங்கலரிசி - 2 கப்
 • தேங்காய் துருவல் - அரை கப்
 • காய்ந்த மிளகாய் - 8
 • கறிவேப்பிலை - சிறிது
 • காரட், பீட்ரூட், கோஸ்,
 • குடைமிளகாய், பீன்ஸ் என
 • பொடியாக அரிந்த காய்கறிகள் - தலா அரை கப்
 • தக்காளி - 3
 • உப்பு - தேவைக்கு
 • எண்ணெய் - 4 டீஸ்பூன்
 • கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்

செய்முறை:-

அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். காய்கள் சற்று வதங்கியதும் அரைத்த மாவை சேர்த்து, சிறு தீயில் வைத்து நன்றாக அடி பிடிக்காமல் கிளறவும்.

பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி இட்லிப் பானையில் வைத்து, ஆவியில் வேக விடவும். கொழுக்கட்டை சாப்பிட்டு அலுத்த குழந்தைகளுக்கு வித்தியாசமான, கலர்ஃபுல் ஸ்நாக்ஸ் இந்த வெஜிடபிள் உருண்டை!