வெண்ணெயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். மற்ற காய்கறிகளையும் போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு காய்கறிகள் மெத்தென ஆகும் வரை வேக வைக்கவும். பால் மற்றும் மைதா மாவை சேர்த்து சிறிது நேரம் சூடாக்கி, மற்ற காய்கறிகளுடன் சேர்க்கவும். சூடான சூப் தயார்.