வேர்க்கடலை பர்பி
  • 433 Views

வேர்க்கடலை பர்பி

தேவையான பொருட்கள்:

  • வேர்க்கடலை - 1 கப்
  • தேங்காய்த் துருவல் - 1 கப்
  • சர்க்கரை - ஒன்றரை கப்
  • முந்திரிப் பருப்பு - கால் கப்
  • நெய் - அரை கப்
  • ஏலக்காய் - சிறிது
  • சுக்குப்பொடி - சிறிது

செய்முறை:

பச்சை வேர்க்கடலையை வாங்கி வீட்டிலேயே வெறும் வாணலியில் வறுத்து, தோல் நீக்கி, பின் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும் சிறிது நெய்விட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையை சிறிது நீர்விட்டு பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் வேர்க்கடலைப் பொடி, வறுத்த தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு ஆகியவற்றைப் போட்டு கிளறவும். ஒன்று சேர்ந்து பதமாக வரும்பொழுது நெய்விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். சுருண்டு வரும்பொழுது சுக்குப்பொடி, சிறிது ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும்.

நெய் தடவிய அகலமான தட்டில் கொட்டி பரப்பி, சற்று ஆறியதும் விருப்பமான வடிவத்தில் வில்லைகள் போட்டால்..... சத்தான, சுவையான ஸ்வீட் ரெடி!