பழத்துண்டுகளையும் சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்துக் கலக்கி, கண்ணாடி தம்ளர்களில் நிரப்பி, ஐஸ் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும். மிளகுத் தூள் சேர்த்துக் குடித்தால் புது விதமான ருசி கிடைக்கும். இது சிலருக்குப் பிடிக்காமல் போகும் என்பதால் சிறிய அளவில் முயன்று பார்த்துப் பின்னர் அதிக அளவில் கலந்துகொள்ளலாம்.