கோதுமை ரவை குக்கா
 • 319 Views

கோதுமை ரவை குக்கா

தேவையான பொருட்கள்:

 • சம்பா கோதுமை ரவை - 1 டம்ளர்
 • பச்சைப் பட்டாணி - 1 கப்
 • பெரிய வெங்காயம் - 2
 • பெரிய பூண்டுப் பற்கள் - 5
 • பச்சை மிளகாய் - 6
 • முந்திரி - 5
 • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
 • பட்டை - 2
 • ஏலக்காய் - 2
 • லவங்கம் - 2
 • புதினா இலை - 1 பிடி
 • பிரிஞ்சி இலை - 2
 • தேங்காய் பால் - 2 டம்ளர்
 • தண்ணீர் - 2 டம்ளர்
 • நெய் - சிறிது
 • ஆயில் - சிறிது
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ரவையை நெய்விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும், பிறகு குக்கரில் கொஞ்சம் ஆயில் ஊற்றி பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டுத் தாளிக்கவும். பிறகு முந்திரி, புதினா இலை, இஞ்சி பூண்டு விழுது, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி இவைகளைப் போட்டு நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் ரவை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடிவிடவும். 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். (மிதமான தீயில் இதை செய்யவும்) சிறிது நேரம் கழித்து சிறிதளவு நெய் விட்டு கிளறி உருளைக்கிழங்கு குருமாவுடன் இதை பரிமாறவும்.