ஒயிட் க்ரேவி
  • 113 Views

ஒயிட் க்ரேவி

வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டாங்க... டிபன் சும்மா ரிச்சா இருக்கணுமா? ஒரு கலக்கல் கிரேவி செஞ்சுபாருங்க.. ம்ம்... ஆஹா ஓஹோனு பாராட்டுவாங்க..... சப்பாத்தி, நாண், பராட்டாவோட சரியான மேட்ச். குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம், அவங்களாவே சாப்ட்டுருவாங்க.

தேவையான பொருட்கள்:

  • புளிப்பில்லாத தயிர் - 1 கப்
  • க்ரீம் - 1/2 கப்
  • துருவிய பாலாடை (அ) பன்னீர் பால் - 1 டீ ஸ்பூன்
  • உடைத்த முந்திரி - 1 குழிக்கரண்டி
  • உரித்து லேசாக வறுத்தப் பட்டாணி - 1 டீ ஸ்பூன்
  • பால் - 2 குழிக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - 1 துண்டு
  • நறுக்கிய கொத்தமல்லி - 1 குழிக்கரண்டி
  • ப்ரெட்டின் வெள்ளைப் பகுதி - 1 துண்டு
  • சர்க்கரை - 1 டீ ஸ்பூன்
  • செர்ரீ (விருப்பப்பட்டால்) - 1 டீ ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பட்டை-இலவங்கம் பொடி - 1/5 டீ ஸ்பூன்
  • நெய் (அ) எண்ணெய் - 3 குழிக்கரண்டி
  • தேவையான காய்கறிகள் - 1/4 கிலோ

செய்முறை:

* முந்திரி, பட்டை, ப்ரெட் மூன்றையும் உலர்ந்த மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், இஞ்சி, மிளகாய், கசகசா இவற்றை பால் சேர்த்து அரைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் (அ) நெய் சூடு செய்து, அரைத்த வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவும்.

* தயிர் சேர்த்து அதன் வெள்ளை நிறம் மாறும்வரை விடாமல் கிளறவும்.

* பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு, சர்க்கரை, உப்புப்பொடி, காரப்பொடி, க்ரீம் சேர்க்கவும்.

* கொதிக்கும்வரை மெதுவாகக் கிளறவும். இந்நிலையில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

* கெட்டியாக வரும்வரை சிறிது நிமிடங்கள் மூடி வைக்கவும்.

* துருவிய பாலாடை, கொத்தமல்லி, செர்ரீ கொண்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு:

இரும்பு வாணலியில் சமைப்பதைத் தவிர்க்கவும். அடிப்பாகம் கனமாக இருக்கும் எவர்சில்வர் (அ) காப்பர் பாத்திரத்தைப் பயன்படுத்தவும்.