பூசணிக்காய் தயிர்அவல்
  • 191 Views

பூசணிக்காய் தயிர்அவல்

தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ

தேவையான பொருட்கள்:

  • பூசணிக்காய் - 1
  • அவல் - 1 கிலோ
  • தயிர் - 4 லிட்டர்
  • நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
  • நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
  • உப்பு, மிளகு - தேவையான அளவு

செய்முறை:

* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.

* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.

* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!

* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.